எண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்!
எண்ணெய்க் குளியல்:
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நாம் பழங்காலத்தில் இருந்தே கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு பழக்கம். `பதார்த்த குண சிந்தாமணி’ என்ற மருத்துவ நூலில், `நோயணுகா விதி’ என்று ஒரு பாடல் இருக்கிறது. அதில், நம்மை நோய் தாக்காமல் இருக்கச் செய்யவேண்டிய காரியங்கள் குறித்துப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் ஒரு பகுதி. அந்த அளவுக்கு தமிழர்கள், மருத்துவத்தில் எண்ணெய் தேய்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்
* இரைப்பு,இளைப்பு நோய்கள் நீங்கும்.
* முகத்தில் உண்டாகும் நோய்கள் நீங்கும்.
* மூக்கடைப்பு நீங்கும்.
* அதிவியர்வை நீங்கும்.
* தெளிவு உண்டாகும்
* தலை,முழங்கால்கள் உறுதியடையும்
* ஐம்புலன்களுக்கும் பலம்
* தலைவலி ,பல்வலி நீங்கும்
* உடல் பலமாகும்
* தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும்
* முடி கறுத்து வளரும்
* சோம்பல் நீங்கும்
* சுவையின்மை நீங்கும்
* நல்ல குரல் வளம் உண்டாகும்
* மிகவும் முக்கியமாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை:
நல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்தவேண்டும்.எண்ணெய்
எண்ணெய்க் குளியலன்று செய்ய வேண்டியவை:
* நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15-30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும்.
* அதிகாலையிலேயே (6.30மணிக்குள்) குளித்து முடித்துவிட வேண்டும்.
* வாரமிருமுறை அதாவது,ஆண்கள்,புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
* அதிகாலையிலேயே (6.30மணிக்குள்) குளித்து முடித்துவிட வேண்டும்.
* வாரமிருமுறை அதாவது,ஆண்கள்,புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,பெண்கள்,
எண்ணெய்க் குளியலன்று செய்யக்கூடாதவை:
* பகலில் தூங்கக் கூடாது.
* அதிக வெயிலில் அலையக்கூடாது.குளிர்ந்த உணவுகள்,பானங்கள் எடுத்துக் * கொள்ளக் கூடாது
* உடலுறவு கொள்ளக் கூடாது
* நண்டு,கோழி,மீன்,செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.
* அதிக வெயிலில் அலையக்கூடாது.குளிர்ந்த உணவுகள்,பானங்கள் எடுத்துக் * கொள்ளக் கூடாது
* உடலுறவு கொள்ளக் கூடாது
* நண்டு,கோழி,மீன்,செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.
என்றும் உங்களின் நலனில்👉drvgsowmisiddhamedicinetips.blogspot.com


Good👌👌
ReplyDeletetq keep suporting
Deletetq
ReplyDelete