Posts

Showing posts from June, 2021

எண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்!

Image
  எண்ணெய்க் குளியல்: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நாம் பழங்காலத்தில் இருந்தே கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு பழக்கம் . `பதார்த்த குண சிந்தாமணி’ என்ற மருத்துவ நூலில் , ` நோயணுகா விதி ’ என்று ஒரு பாடல் இருக்கிறது. அதில், நம்மை நோய் தாக்காமல் இருக்கச் செய்யவேண்டிய காரியங்கள் குறித்துப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் ஒரு பகுதி. அந்த அளவுக்கு தமிழர்கள், மருத்துவத்தில் எண்ணெய் தேய்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் . எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள் * இரைப்பு,இளைப்பு நோய்கள்  நீங்கும். * முகத்தில் உண்டாகும் நோய்கள்  நீங்கும்.   * மூக்கடைப்பு  நீங்கும். * அதிவியர்வை நீங்கும். * தெளிவு உண்டாகும் * தலை,முழங்கால்கள் உறுதியடையும் * ஐம்புலன்களுக்கும் பலம் * தலைவலி ,பல்வலி நீங்கும் * உடல் பலமாகும் * தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும் * முடி கறுத்து வளரும் * சோம்பல்  நீங்கும் * சுவையின்மை நீங்கும் * நல்ல குரல் வளம் உண்டாகும் * மிகவும் முக்கியமாக   உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர...

சித்த மருத்துவ அழகு குறிப்புகள் - வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து சருமம் பொலிவு பெற..

Image
  சருமத்தின் அழகையும், பொலிவையும் பாதுகாக்க வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்தாலே போதுமானது. அழகை பாதுகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்.      *பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். *தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும். *தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும்  *ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும் *முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும் *நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். *தேநீரில...

வாழ்வில் நாம் மற்றும் நம் குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை.

Image
  மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். அதே மனிதன் ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு மிகவும் அவசியம் * வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக சாப்பிடலாம். * கீரை   வாரம்  3 முறை பருப்புக்கூட்டாகவும், ராகி யை சேமியாவாகவும் கொழுக்கைட்டையாகவும், ரொட்டியாகவும் வாரம்  இருமுறை சாப்பிடலாம்! * ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்!   தினமும் சாப்பிடடுங்கள்! பெண்களின் ஆரோக்கியம் மேம்பட..     *   தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கி உபயோகிக்கவும்.     *   தினமும் 5 பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடுங்கள்!      *   மிகவும் முக்கியமாக   - கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வேண்டும்! ஆண்களின் ஆரோக்கியம் மேம்பட.. *  தயவு செய்து பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை உண்ணாதீர்கள்.  *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்   குடிக்கவும்! நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு ப...