வாழ்வில் நாம் மற்றும் நம் குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை.
மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். அதே மனிதன் ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு மிகவும் அவசியம்
* வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக சாப்பிடலாம்.
* கீரை வாரம் 3 முறை பருப்புக்கூட்டாகவும்,ராகியை சேமியாவாகவும் கொழுக்கைட்டையாகவும், ரொட்டியாகவும் வாரம் இருமுறை சாப்பிடலாம்!
* ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்! தினமும் சாப்பிடடுங்கள்!
பெண்களின் ஆரோக்கியம் மேம்பட..
* தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கி உபயோகிக்கவும்.
* தினமும் 5 பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடுங்கள்!
* மிகவும் முக்கியமாக - கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வேண்டும்!
* தயவு செய்து பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை உண்ணாதீர்கள்.
*சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்
குடிக்கவும்!
நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம்.
இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவன் மூலம் சாத்தியமாகும்.
இன்றே! முயற்சிப்போம்! வாருங்கள்!
👉 இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்.
நமது நலனில் என்றும் உங்களுடன் 👉 drvgsowmisiddhamedicinetips.blogspot.com

Super👌👌
ReplyDeletetq so much keep supporting
Delete